சனி, 8 பிப்ரவரி, 2014

கணித வரையறைகள்

மெய்யெண்கள்
       வர்க்கம்:-   ஓர் எண்ணின் இரண்டாம் அடுக்கு அவ்வெண்ணின் வர்க்கமாகும். (அல்லது)  ஓர் எண்ணை,  அதே எண்ணால் பெருக்கக் கிடைப்பது அவ்வெண்ணின் வர்க்கம்.
       எடுத்துக்காட்டு:- 5^2 = 5 X 5 = 25.
       முழு வர்க்கம்:-  ஓர் எண்ணின் வர்க்கமாக அமையும் இயல் எண் முழுவர்க்கம் என்று பெயர்.  (அல்லது)  ஒவ்வொரு சோடியிலும் சம காரணிகளைக் கொண்ட பிரிவுகளாக உங்களால் அமைக்க முடிந்தால் முழுவர்க்கம் எனப்படும்.
       எடுத்துக்காட்டு:- 36 = 6 X 6 .
                      எனவே, 36 ஒரு முழுவர்க்க எண்.
       முழுவர்க்க எண்களின் பண்புகள்:-
         01. 2, 3, 7, அல்லதுஇல் முடியும் இயல் எண்கள் முழுவர்க்கங்கள் ஆகா.
                 02. 0, 1, 4, 5, 6, அல்லது 9 இல் முடியும் எல்லா எண்களும் வர்க்க எண்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
          03. இரட்டை இயல் எண்களின் வர்க்கங்கள் எப்பொழுதும் இரட்டையே ஆகும்.
                 04. இரட்டை இயல் எண்களின் வர்க்கங்கள் 4 ஆல் மீதியின்றி வகுபடும்.

        05. ஒற்றை இயல் எண்களின் வர்க்கங்கள் ஒற்றையே ஆகும்.


வர்க்கமூலம்:-

      வர்க்க மூலத்தின் குறியீடு √ .

      ஒரு முழுவர்க்க எண்ணின் வர்க்கமூலம் காணல்:-
                           கொடுக்கப் பெற்றுள்ள எண்ணைப் பகாக் காரணிகளாகப் பிரிக்கவும்.
                    ❷ ஒவ்வொரு பிரிவிலும் சம காரணிகளாகக் கொண்ட சரியான சோடிகள் கிடைக்கும். ஒவ்வொரு சோடியிலிருந்தும் ஒரு பகாக்காரணியை எழுதிக் கொள்ளவும்.
                    ❸ இவ்வாறு கிடைத்த பகாக் காரணிகளைப் பெருக்கவும்.

      வர்க்கமூலத்தின் பண்புகள்:-
                 ⍟ ஒரு முழுவர்க்க இயல் எண்ணின் மிகை வர்க்கமூலம் கொடுக்கப் பெற்ற எண்ணை விட  எப்பொழுதும் சிறியதாகவே அமையும்.
                ⍟ ஒரு முழுவர்க்க தகுப்பின்ன எண்ணின் மிகை வர்க்கமூலம் கொடுக்கப் பெற்ற எண்ணைவிட எப்பொழுதும் பெரியதாகவே அமையும்.

      பின்னப் பெருக்கல்:-
                         ❶ தொகுதிகளைப் பெருக்குதல்.
                         ❷ பகுதிகளைப் பெருக்குதல்.
                ❸ இவற்றைப் பின்னமாக எழுதுதல்.

              வாய்ப்பாடுகள்:-
          , என்பன முழுவர்க்க எண்கள் எனில்,
                                 ❶   √( X )  = √()   X √
                                 ❷  √(/) = √() / √ 

      கலப்பு பின்ன எண்களின் வர்க்கமூலம் காணல்:-
                    கொடுக்கப் பெற்ற கலப்புப் பின்ன எண்ணைத் தகா பின்ன எண்ணாக மாற்றுக. பொதுக்காரணி இருப்பின் நீக்கவும்.
                    ❷ பகுதியின் வர்க்கமூலம்  காண்க. இதை "" என்க.
                   ❸ தொகுதியின் வர்க்கமூலம் காண்க.  இதை "" என்க
                   ❹ /, தேவையான வர்க்கமூலம் ஆகும்.
                  ❺ கலப்புப் பின்ன எண்ணாக மாற்றிக் கொள்க.

    குறிப்புகள்:-
               ❶ √(^2+^2 )    ≠   √(^2 )  +  √(^2 )                
               ❷ √(^2-^2 )     ≠     √(^2 )   -  √(^2 )