செவ்வாய், 31 டிசம்பர், 2013

ஆந்திரா, கோவா, மும்பை, கர்நாடகம் – சுற்றுலா008.

ஆந்திரா, கோவா, மும்பை, கர்நாடகம்சுற்றுலா008.
-01. சென்னை.
-02. மந்திராலயா.
-03. மகாநதி சிவன்.
-04. சிறீசைலம்.
-05. அய்தராபாத் ((கருத்தைக் கவரும் இடங்கள் பார்த்தல்)())
-06. சோலாப்பூர் (பண்டரிபுரம்).
-07. எல்லோரா.
-08. அசந்தா ஓவியச் சிற்பக் கலை.
-09. சீரிடி சாய்பாபா.
-10. நாசிக்.
-11. மும்பை.((கருத்தைக் கவரும் இடங்கள் பார்த்தல்)())
-12. மகாபலீசுவரர்.
-13. கோவா.
-14. கோகர்னா.
-15. மறுடேசுவர்.
-16. மூகாம்பிகை.
-17. உடுப்பி.
-18. தர்மசாலா.
-19. சுப்பிரமண்யா.
-20. அலிபேட்.
-21. பேளூர்.
-22. சரவண பெலகுலா.
-23. மைசூர்.
-24. ஊட்டி.
-25. சென்னை.

12 நாட்கள் சுற்றுலா.

தென் தமிழகம் – சுற்றுலா007

தென் தமிழகம்சுற்றுலா007
        -01. சென்னை.
-02. திருவரங்கம்.
-03. பிள்ளையார்ப்பட்டி.
        -04. திருக்கோட்டியூர்.(திருக்கோஷ்டியூர்)
-05. தேவிப்பட்டிணம்(நவபாஷணம்)
-06. இராமேசுவரம்
-07. திருப்புல்லாணி.
-08. திருச்செந்தூர்.
-09. கன்னியாகுமரி.
-10. சுசீந்திரம்.
-11. பாபநாசம்-பாணத்தீர்த்தம்.
-12. குற்றாலம்.
-13. திருப்பரங்குன்றம்.
-14. அழகர்கோவில்.
-15. பழமுதிர்ச்சோலை.
-16. மதுரை.
-17. திருச்சி.
-18. சென்னை.
இச் சுற்றுலா  செல்ல   குறைந்தது ஆறு  நாட்கள்  தேவை
ஆடி அமாவாசை அன்று பாணத்தீர்த்ததில் இருத்தல் நன்று.

திங்கள், 30 டிசம்பர், 2013

நவக்கிரகக் கோயில்கள் - சுற்றுலா006

நவக்கிரகக் கோயில்கள் - சுற்றுலா006
     - 01. சிதம்பரம்.
        -  02. சீர்காழி.
        -  03. வைத்தீசுவரன் கோயில்.
        -  04. கீழ்ப்பெரும்பள்ளம்.
     - 05. திருநள்ளாறு.
        -  06. ஆலங்குடி.
        -  07. திங்களூர்.
        -  08. திருக்கஞ்சனூர்.
        -  09. திருவெண்காடு.
        -  10. திருநாகேசுவரம்.
        -  11. சுவாமிமலை.
        -  12. தஞ்சாவூர்.
        -   13. திருமணஞ்சேரி.
        -   14. கதிரவனார் கோயில்(சூரியனார் கோயில்).

சனி, 28 டிசம்பர், 2013

தேவியர் தரிசனம் - சுற்றுலா005

தேவியர் தரிசனம் - சுற்றுலா005
     .  அருள்மிகு தேவி மூகாம்பிகை அம்மன் - போரூர் -குன்றத்தூர்.
     .  அருள்மிகு தேவி காமாட்சி அம்மன் - மாங்காடு.
     .  அருள்மிகு தேவி கருமாரி அம்மன் - திருவேற்காடு.
     .  அருள்மிகு தேவி வைசுணவி  அம்மன் - திருமுல்லைவாயில்.
     .  அருள்மிகு தேவி கொடியுடை  அம்மன் - திருமுல்லைவாயில்.
     .  அருள்மிகு தேவி செங்காளி அம்மன் - செம்புலிவரம்.
     .  அருள்மிகு தேவி ஆனந்தவல்லி  அம்மன்(முக்கண் நாயகி) -                            பஞ்சட்டி.
     .  அருள்மிகு தேவி திருவுடை  அம்மன் - மேலூர்.
     .  அருள்மிகு தேவி வடிவுடை  அம்மன் - திருவொற்றியூர்.
புறப்படும்  நேரம்:- காலை 07.00 மணி.
 சேரும் நேரம்:-      மாலை 07.00 மணி.
 செவ்வாய், வெள்ளி மற்றும் பவுர்ணமி நாட்களில்.



வெள்ளி, 27 டிசம்பர், 2013

சோழ நாட்டு திருப்பதிகள் - சுற்றுலா004.

சோழ நாட்டு திருப்பதிகள் - சுற்றுலா004.
     -01. சீர்காழி
     -02. திருநகரி
     -03. திருநாங்கூர்
     -04. திருவெள்ளகுளம் (அண்ணன் கோயில்).  
     -05. திருவிழந்தூர்.
     -06. திருகண்ணபுரம்.
     -07. திருநாகை.
     -08. திருக்கண்ணமங்கை.
     -09. திருச்சேறை
     -10. திருநறையூர்(நாச்சியார் கோயில்).
     -11. திருவிண்ணகர்(ஒப்பிலியப்பன் கோயில்).
     -12. கும்பகோணம்.
     -13. திருக்கண்டியூர்.
     -14. தஞ்சாவூர்.
     -15. திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்).
     -16. திருவெள்ளாரை.
     -17. திருக்கோழி.(உறையூர்).
     -18. திருவரங்கம்
    தனியாக ஊர்தி அமைத்து, இவ்விடங்கள் செல்ல தேவையான நாட்கள் இரண்டு.


உதகமண்டலம் - சிற்றுலா003



உதகமண்டலம் - சிற்றுலா003
ரோசா தோட்டம்(Rose Garden)
குழந்தைகளின் பூங்கா(Children’s Park)
பைக்கார ஏரி(Phykara Lake)
பைக்கார நீர்வீழ்ச்சி(Phykara Waterfalls)
டேவிசு இறக்கம்(Devis Down)
பள்ளி முண்ட்(School Mund)
பைன் காடு(Pine Forest)
குழிப் பந்து விளையாட்டுச் சங்கம்(Golf Club)
ஒன்பதாவது மைல்(9th miles)
முதுமலை சரணாலயம்(Muthumalai Sanchuary)

உதகமண்டலம் - சிற்றுலா002

உதகமண்டலம் - சிற்றுலா002
ரோசா தோட்டம்(Rose Garden)
குழந்தைகளின் பூங்கா(Children’s Park)
பைக்கார ஏரி(Phykara Lake)
பைக்கார நீர்வீழ்ச்சி(Phykara Waterfalls)
டேவிசு இறக்கம்(Devis Down)
பள்ளி முண்ட்(School Mund)
பைன் காடு(Pine Forest)
குழிப் பந்து விளையாட்டுச் சங்கம்(Golf Club)
காமராசு சாகர் அணை(Kamaraj Sagar Dam)
ஒன்பதாவது மைல்(9th miles)






ஞாயிறு, 22 டிசம்பர், 2013

கணித வரையறைகள்:-

கணித வரையறைகள்:-
எண்கள்:-
இந்து முறை:- 
     0,1,2,3,4,5,6,7,8,9 ஆகிய எண்ணுருக்களைக் கொண்டு பத்தை அடிப்படையாகக் கொண்ட இடப்பெறுமான முறையில் எல்லா எண்களையும் அமைக்க முடியும். இதனை முதன் முதலில் கண்டவர்கள் இந்துக்களாதலால், இம் முறை இந்து முறை எனப்படுகிறது.

இந்தோ அரேபிய முறை:-
     இந்து முறை எண்களை அரேபியரால் மேலை நாடுகளுக்கும் பரப்பப்பட்டதால் இந்தோ அரேபிய முறை எனப்படுகிறது.

இயல் எண்கள்(N):-
      1,2,3,... என்று முடிவில்லா எண்கள் தொகுதியை எண்ணும் எண்கள் அல்லது இயல் எண்கள் (N) என்கிறோம்.(அதாவது ஒன்றில் ஆரம்பித்து முடிவில்லா எண் தொகுதி.)

முழு எண்கள்(W):- 
         0,1,2,3,... என்று முடிவில்லா எண்கள் தொகுதியை முழு எண்கள் என்கிறோம்.

எண்கள் எழுதும் முறை:-
     இரு வகைப்படும். அவை,
                1. இந்திய முறை
                2. ஆங்கில முறை  ஆகும்.

இந்திய முறை:-
     வலமிருந்து   ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம்,  பத்து இலட்சம், கோடி என் எழுதும் முறை.
     எடுத்துக்காட்டு:-
         1,23,45,678 = ஒரு கோடியே இருபத்திமூன்று இலட்சத்து நாற்பத்தைந்தாயிரத்து அறுநூற்று எழுபத்தெட்டு.

ஆங்கில முறை:-
      வலமிருந்து இடதுபுறமாக ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரம், மில்லியன், பத்து மில்லியன், நூறு மில்லியன் என எழுதுவது ஆங்கில முறை.  
   எடுத்துக்காட்டு:-
       123,456,789 = நூற்றிருபத்திமூன்று மில்லியன் நானூற்று ஐம்பத்தாறாயிரத்து எழுநூற்று எண்பத்தொன்பது.

திட்ட வடிவ எண் உருவு:-
     திட்ட வடிவ எண் உருவினை எழுதும்போது வலமிருந்து இடம் செல்ல செல்ல மூன்று, முன்று இலக்கங்களாக இடம்விட்டு எழுதுவது சர்வதேச மரபாக ஏற்கப்பட்டுள்ளது.    
       எடுத்துக்காட்டு:-
                        123,456,789.

தொடரி:-
       ஓர் எண்ணைத் தொடர்ந்து வருகின்ற அடுத்த பெரிய எண், அதன் தொடரி ஆகும்.  
  எடுத்துக்காட்டு:-
               8 இன் தொடரி 9.

முன்னி:-
             ஓர் எண்ணின் முந்தைய சிறிய எண், அதன் முன்னி எனப்படும்.
        எடுத்துக்காட்டு:-
                      8 இன் முன்னி 7.

ஏறு வரிசை:-
       கொடுக்கப்பட்ட எண்களைச் சிறிய எண்ணிலிருந்து பெரிய எண்ணிற்கு வரிசைப்படுத்தி எழுதுவது  ஏறுவரிசை எனப்படும்.
  எடுத்துக்காட்டு:- 
            8, 11, 15, 17, 23, 30.

இறங்கு வரிசை:-
  கொடுக்கப்பட்ட எண்களைப் பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணிற்கு வரிசைப்படுத்தி எழுதுவது  இறங்குவரிசை எனப்படும்.
     எடுத்துக்காட்டு:- 
                 40, 33, 24, 15, 9.

கூட்டல்:- 

     எண்களை சேர்த்து மொத்தம் காணும் செயலைக் கூட்டல் என்கிறோம்.


சுழியுடன் கூட்டல்:-
    சுழியுடன் எந்த முழு எண்ணைக் கூட்டினாலும் அல்லது எந்த முழு எண்ணுடன் சுழியைக் கூட்டினாலும், அதே எண்தான் விடையாகக் கிடைக்கும்.

கழித்தல்:-
      ஓர் எண்ணிலிருந்து மற்றோர் எண்ணைக் குறைத்து மீதியைக் காண்பது கழித்தல் ஆகும்.

எதிரெதிர்ச் செயல்கள்:-
     1. கூட்டலும் கழித்தலும் எதிரெதிர்ச் செயல்கள் ஆகும்.
     2. பெருக்கலும் வகுத்தலும் எதிரெதிர்ச் செயல்கள் ஆகும்.

சுழியைக் கழித்தல்:- எந்த எண்ணிலிருந்து சுழியைக்  கழித்தாலும் அதே எண்தான் விடையாகும்.

அனைத்துச் செயலிகளும் கலந்த கோவைகளைத் தீர்த்தல்:-
     (அ) 1. கூட்டலும் கழித்தலும் சேர்ந்து வரும் கணக்குகளில் கூட்ட வேண்டிய எண்களை எல்லாம் ஒன்றாகக் கூட்ட வேண்டும். கழிக்க  வேண்டிய எண்களை எல்லாம் ஒன்றாகக் கூட்ட வேண்டும். பின் முதல் கூட்டுத்தொகையிலிருந்து இரண்டாவது கூட்டுத்தொகையைக் கழிக்க வேண்டும்.
     எடுத்துக்காட்டு:-
           9218 - 2346 - 4719 + 381
         = 9218 + 381 - 2346 - 4719
         = 9599 - 7065
         = 2534.
         2. அடைப்புகள் இருப்பின் முதலில் அடைப்புகளுக்குள் உள்ள செயல்கள்ச் செய்து கொண்டு பின் கூட்டல் அல்லது கழித்தலைச் செய்ய வேண்டும்.
     எடுத்துக்காட்டு:-
            18 - ( 7 - 1) + 5 - 6
          = 18 - 6  + 5 - 6
          = 18 + 5 - 6 - 6
          = 23 - 12
          = 11.
     (ஆ) எண்களாலான ஒரு கோவையில் +, -, ×, ÷ ( ) போன்ற குறிகள் இருக்கலாம். அவ்வாறு இருப்பின்,
          1. முதலில் அடைப்புக்குள் உள்ள செயல்களைச் செய்ய வேண்டும்.
          2. பின் ×, ÷ ஆகிய செயல்களை இடப்புறமிருந்து வலப்புறமாக வரிசைப்படிச் செய்ய வேண்டும்.
         3. அதன் பின், +, - ஆகிய செயல்களைச் இடப்புறமிருந்து வலப்புறமாக வரிசைப்படிச் செய்ய வேண்டும்.

பெருக்கல்:-
      பெருக்கல் என்பது ஒரே எண், பல முறைக் கூட்டுவதற்கு பதிலாக பயன்படும் செயல்.
       எடுத்துக்காட்டு:-
            7 + 7 + 7 + 7 = 28
            7 X 4 = 28.  

 ஒரு செயலின் சுருக்கம்:-
            பெருக்கல் என்பது கூட்டலின் சுருக்கம் ஆகும்.

சுழிப் பெருக்கல்:-
      சுழியால் எந்த எண்ணைப்  பெருக்கினாலும், அன்றி சுழியை எந்த எண்ணால் பெருக்கினாலும் விடை சுழிதான் கிடைக்கும்.
    எடுத்துக்காட்டு:-
             4 X 0 = 0
             0 X 7 = 0.

ஒன்றால் பெருக்கல்:-
          எந்த எண்ணை 1 ஆல் பெருக்கினாலும் அதே எண்தான் பெருக்கற் பலனாக அமையும்.
     எடுத்துக்காட்டு:-
             12 X 1 = 12
              1 X 8 = 0.

வகுத்தல்:-
         ஓர் எண்ணிலிருந்து, ஒரே எண்ணை பல முறை கழித்தலை வகுத்தல் என்கிறோம்.

சுழியை வகுத்தல்:-
       சுழியைச்,சுழியைத் தவிர வேறு எந்த எண்ணால் வகுத்தாலும் விடை சுழி.

ஒன்றால் வகுத்தல்:-
          எந்த எண்ணையும் 1ஆல் வகுத்தால் விடை அவ்வெண்ணே ஆகும்.

சூத்திரம்:-
          வகுபடும் எண் = ஈவு X வகுக்கும் எண் + மீதி