வெள்ளி, 30 மே, 2014

திருச்சி மற்றும் சுற்றியுள்ள கோயில்கள், பார்க்க வேண்டிய இடங்கள்.- சுற்றுலா014

கோயில்கள்:-
01. மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில்.
02. திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்.
03. திருவரங்கம் அரங்கநாதர் கோயில்.
04. திருப் பட்டூர். 
05. திருவள்ளரை கோயில்கள்.
06. சமயபுரம் மாரியம்மன் கோயில்கள்.
07. நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க கிருத்துவ வழிபாட்டுத் தலமாகிய புனித லூர்து அன்னை ஆலயம்.
08. இசுலாமிய வழிபாட்டுத் தலமாகிய பழம் பெருமையுடைய "நதர் வலி தர்கா" ஆகியவையாகும்.
பொழுதுப்போக்கு இடங்கள்::-
01. முக்கொம்பு  எழில் மிக்க பொழுது போக்கு பூங்கா, மேலும் அறிவியல் பூங்கா.
02. பச்சை மலை
03. புளியஞ்சோலை - திருச்சியிலிருந்து துறையூர் வழியாக 72 கி.மீ. தொலைவிலுள்ள இயற்கை எழில் சூழ்ந்த இடம்.
04. கல்லணை

சொல் வைப்பகம்


Acupuncture Treatment = குத்தூசி மருத்துவம்.
Administrative powers = நிருவாக அதிகாரங்கள்.
Animation = உயிர்ப்பூட்டல்.
Antivirus software = நச்சு முறி மென்பொருள்/நச்செதிர் மென்பொருள்.
Arcade = அணிமனை.
Badge = குறிவில்லை.
Bank Instrument = வங்கிக் காசாவணம்.
Bar Association = வழக்குரைஞர் கழகம்.
Bilateral = இருபுலம்.
Bio Fuel =  தாவர எரிபொருள்
Caller Line Identification phone =ஆளறி பேசி
Capitation Fee = மேம்பாட்டுக் கட்டணம்.
Capsule =  சுரை மருந்து.
Career Guidance Programme = பணி நெறியாக்கத் திட்டம்.
Castle = கோட்டைவீடு.
Cello tape = ஒட்டு நாடா.
Common Admission Test (CAT) = பொது சேர்க்கைத்
தேர்வு(பொ.சே.தே.)
Dash Board = கருவி முன் தட்டு.
Debris = கூளம்.
Decoction = கொதி வடிநீர்.
Deemed University = நிகர்நிலைப் பல்கலைக் கழகம்.
Dial Tone = தொடர்புத் தொனி.
Digital = சொடுக்கெண், எண்மம்.
E Banking = மின் - வங்கியியல்.
E – Business = மின் - தொழில் வாணிகம்.
E – Commerce =  மின் - வணிகம்.
E – Mail identification = மின் - அஞ்சல் குறி.
Empathy = ஊடுணர்வு, அதுவாதல்.
Electoral accord = தேர்தல் உடன்பாடு.
Electronic Clearing Service (E.C.S.) = மின்னணு பணிமாற்றுப் பணி (மி. . .)
Electronic Media Sector = மின்னணு ஊடகப் பிரிவு.
Electric Multiple Unit = மின் தொடர் வண்டி.(மி.தொ..)
Enthusiasm = உணர்ச்சிப் பெருக்கு. பேரார்வம்.
Entry = செல்வழி.
Executive Function = செயலாட்சி.
Feed Back = பயனீட்டம்
Fiber boat = இழைப் படகு.
Ground Situation = களச் சூழல்.
Gullible Sections = ஏமாற்றப்படும் பிரிவினர்.
Large Storage Memory = பெருந்தேக்க நினைவகம்.
Legal Services Authority = சட்டப் பணியுதவி ஆணைக் குழு.
Management Quota = நிருவாக ஒதுக்கீடு.

வெள்ளி, 14 மார்ச், 2014

தமிழர் மருத்துவம்


வயிறு தொடர்பான வலி நீங்க:-
Ø  மிளகை எண்ணெயில் மிதமாக வறுத்து சீரகம், உப்பு  சேர்த்து தூள் செய்து சுடுசோற்றில் பிசைந்து இரவு சாப்பிட வேண்டும்.
ஆசுத்துமா, மூச்சு திணறல் குணமாக:-
Ø  முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.
வயிற்று உப்புசம், பேதி தீர:-
Ø  சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பொடியாக்கி கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, கிராம்பு சேர்த்து தயிருடன் கலந்து குடிக்க வேண்டும்.
பித்த வெடிப்பு நீங்க:-
Ø  வேப்பிலை, மஞ்சள் அரைத்து நல்ல சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணெயில் கலந்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
அசீரணம் சரியாக () சீரண சக்தி உண்டாக:-
Ø  அகத்திக்கீரையில் சுண்ணாம்புச் சத்து நிறைய இருக்கின்றன. மூளைக் கோளாறு சரியாகும். சீரண சக்தி உண்டாகும். உடலுக்கு நல்ல சக்தியைத் தரும்.

Ø  ஒரு குவளை தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி குடிக்க அசீரணம் சரியாகிவிடும்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

கணித வரையறைகள்

வடிவியல்
நிரப்புக்கோணங்கள்(Complementary angles):-
 இரண்டு கோணங்களின் கூடுதல் 90 பாகைகள் எனில், அந்த கோணங்கள் நிரப்புக் கோணங்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு:-
30°+ 60° = 90°
எனவே, 30°, 60° ஒன்றுக்கு ஒன்று நிரப்புக் கோணங்கள் ஆகும்.

மிகை நிரப்புக்கோணங்கள்(Supplementary angles):-
இரண்டு கோணங்களின் கூடுதல் 180 பாகைகள் எனில், அக் கோணங்கள் மிகை நிரப்புக் கோணங்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு:-
70°+ 110° = 180°
எனவே, 70°, மற்றும் 110° என்ற இரு கோணங்களும் ஒன்றுக்கு ஒன்று மிகை நிரப்புக் கோணங்கள் ஆகும்.

அடுத்தடுத்தக் கோணங்கள் (Adjacent angles):-
இரண்டுக் கோணங்கள் ஒரு பொதுப்புள்ளியைக் கொண்டு பொதுக் கோட்டிற்கு எதிரெதிர் பக்கங்களில் அமையும் இரண்டுக் கோணங்களை, அடுத்தடுத்தக் கோணங்கள் எனப்படும்.


சனி, 15 பிப்ரவரி, 2014

கணித வரையறைகள்

உரோமன் எண்கள்
உரோமன் எண்கள்:-                                                      உரோமன் எண்ணுருக்கள் மொத்தம் 7 தான்
                   அவை,
                        I   = 1
                        V   =  5
                        X   =  10
                        L   =  50
                        C   =  100
                        D   =   500
                        M   =   1000

உரோமன் எண்கள் எழுதுவதற்கான விதிமுறைகள் கீழே காண்போம்.
                     விதி01:- ஓர் எண்ணில், ஒரே மதிப்புள்ள எண்ணுருக்கள் கூட்ட வேண்டும். அவை I, X, C, M  என்ற  நான்கு எண்ணுருக்கள் மட்டும்தான். இந்த குறீயீடுகள் ஓர் ண்ணில் மூன்று முறைகளுக்கு மேல் திரும்ப வரக் கூடாது.
                    எடுத்துக்காட்டுகள்:- 
                                       II      =      2
III     =      3.
XX    =      20.
XXX  =      30.
CC    =      200.
CCC  =      300.
MM   =      2000.
MMM =      3000.
                               
நான்கு என்ற எண்ணை  IIII என எழுதக்கூடாது. அதை IV என எழுத வேண்டும்.
40    =   XXXX    -       தவறு.
40    =   XL         -       சரி.
400   =  CCCC   -       தவறு.
400   =  CD       -       சரி.  

                            விதி02:- ஓர் எண்ணில், உரோமன் எண்ணுருக்கள் V, L, D ஆகியவை திரும்ப வரக் கூடாது.

             விதி03:-  கூட்டல் விதி:- ஓர் எண்ணில்ஒரு பெரிய எண்ணுருக்கு வலதுப்புறத்தில் சிறிய எண்ணுருக்கள் ருந்தால்சிறிய எண்ணுருக்களைபெரிய எண்ணுரு டன் கூட்ட வேண்டும்.
                              எடுத்துக்காட்டுகள்:-
                        VIII  =      5+1+1+1   = 8.
                        XIII  =      10+1+1+1 = 13.
                        XV    =      10+5         = 15.
                        LXX  =      50+10+10 =  70.       
                        CX    =      100+10     =  110.
                        DC    =      500+100   =  600.
                        MD   =      1000+500 =  1500.

                       விதி04:- கழித்தல் விதி:- ஓர் எண்ணில், ஒரு பெரிய எண்ணுருவிற்கு இடதுபுறம் சிறிய எண்ணுரு இருந்தால், சிறிய எண்ணுருவை  பெரிய எண்ணுருவிலிருந்து கழிக்க வேண்டும்.
                        எடுத்துக்காட்டுகள்:-
                              IV      =  5 – 1     =  4.
                              IX      =  10 – 1   =  9.
                              XL     =   50 – 10   =   40.    
                              XC     =   100 --  10  =  90.
                              CD     =    500  --  100  = 400.
                              CM       =    1000  --  100  =  900.  

                       விதி05:- உரோமன் எண்ணுருக்கள் V, L, D எப்பொழுதும் கழிக்கக் கூடாது.
                             @ உரோமன் எண்ணுருக்கள் V மற்றும் X லிருந்து I என்ற எண்ணுருவை ஒரு முறை மட்டும் கழிக்க வேண்டும்.
                             @ உரோமன் எண்ணுருக்கள் L மற்றும் C லிருந்து X என்ற எண்ணுருவை ஒரு முறை மட்டும் கழிக்க வேண்டும்.
                            @ உரோமன் எண்ணுருக்கள் D மற்றும் M லிருந்து C என்ற எண்ணுருவை ஒரு முறை மட்டும் கழிக்க வேண்டும்.

                      மேலே கண்ட விதிமுறைகளைக் கொண்டு, கீழ்காணும் எண்களுக்கான உரோம எண்களைக் காணலாம்.
14    =      XIV           
17    =      XVII         
23    =      XXIII
27    =      XXVII               
29    =      XXIX        
32    =      XXXII
38    =      XXXVIII    
39    =      XXXIX      
45    =      XLV
47    =      XLVII                
49    =      XLIX         
55    =      LV
69    =      LXIX         
72    =      LXXII                
88    =      LXXXVIII
101   =      CI             
105   =      CV            
120   =      CXX
129   =      CXXIX      
137   =      CXXXVII   
140   =      CXL
149   =      CXLIX       
150   =      CL            
170   =      CLXX
188   =      CLXXXVIII        
190   =      CXC          
200   =      CC
500   =      D              
440   =      CDXL                
1000 =      M
111   =      CXI           
119   =      CXIX        
109   =      CIX
160   =      CLX          
180   =      CLXXX      
199   =      CXCIX
210   =      CCX          
240   =      CCXL                
250   =      CCL
280   =      CCLXXX   
340   =      CCCXL      
350   =      CCCL
640   =      DCXL                
649   =      DCXLIX    
700   =      DCC
767   =      DCCLXVII 
800   =      DCCC               
830   =      DCCCXXX
885   =      DCCCLXXXV                             
1987 =      MCMLXXXVII  
                         
                    உரோமன் எண்ணிலிருந்து இந்து அரேபிய எண்ணாக எழுதவும்.
XIV            =      14            
XVI            =      16            
XXII           =      22
XXV          =      25            
XXXVIII    =      38            
XLIX         =      49
XLVIII       =     48            
LXXVI       =      76            
LXXXVII   =      87
XCIV         =      94            
CXI           =      111           
CLVIII       =      158
CCXL        =      240
CCCVII     =   307.           
CCCLII     =      352           
DCXLIX    =      649
DCCC       =      800           
CM           =      900           
MCML      =      1950