ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

இருபதாம் நூற்றாண்டா...! இரண்டாம் நூற்றாண்டா...!!


நீ
இல்லையென்றால்...
நான்
இல்லை...!

நீ
பிறந்திராவிட்டால்...
நான்
பிறந்தும் பயனில்லை...!

நீ
காடுமேடுகளை சுற்றியிராவிட்டால்....
நான்
புழு பூச்சியைப் போல் மிதிபட்டு இருப்பேன்...!

நீ
பள்ளிப் படிப்பைக் காணாததால்...
நான்
கல்லூரி படிப்பைக் கண்டேன்...!

நீ
நீர் முகர்ந்ததால்...
நான்
நீர் முகர முடிந்தது...!

நீ
உணவகத்தில் நுழைந்ததால்...
நான்
உணவகத்தில் நுழைய முடிந்தது...!

நீ
கோயிலினுள் சென்றதால்...
நான்
கோயிலினுள் செல்ல முடிந்தது...!

நீ
பிறந்ததால்...
நான்
மனிதனானேன்...!

நீ
பிறவாமலிருந்தால்...
நான்
மிருகமாக்கப்பட்டிருப்பேன்...!

நீ
மனிதன் மனிதனாக வாழ வழி வகைகள் கூறினாய்
இல்லையென்றால்
நான்
மிருகத்தினும் மிருகமாக வாழ்ந்து இருப்பேன்.

நீ
சிந்தித்ததால்....
நான்
சிந்திக்க முடிந்தது...!

நீ
பேசியதால்...
நான்
பேச முடிந்தது...!

நீ
எழுதியதால்...
நான்
எழுத முடிந்தது...!

நீ
நடந்து காட்டியதால்...
நான்
நடக்க முடிந்தது...!

இருபதாம் நூற்றாண்டாக இருந்தும்
நீ இராமல் இருந்திருந்தால்...
இரண்டாம் நூற்றாண்டில் இருப்பதாக
நான் நினைத்திருப்பேன்...!
என்னுள் இருந்து
ஆட்டுவிக்கும் அந்த
நீ
யார்?

செப்டம்பர்த் திங்கள்
பதினேழாம் நாள்
ஈரோட்டில் உதித்த
ஈ.வெ.இராமசாமி
என்கின்ற
தந்தை பெரியாரோ...!
நீவீர்
தான்
அந்த நீயோ...!

நிலவழகன் pasan1957@gmail.com