ஞாயிறு, 7 அக்டோபர், 2012

தமிழர் விழா -- பொங்கல் விழா


தமிழர் விழா -- பொங்கல் விழா
அந்த சொற்றொடருக்கு தகுதி வாய்ந்தவர்களா என்று ஆராயப் புகுந்தோமானால் நிறைய சான்றுகள் நமக்கு கிடைக்கும். நிறைய தகுதிகளுடன் வாழ்ந்து இருக்கிறோம். நாகரிகத்தின் உச்சியிலும், பண்பாட்டின் உச்சியிலும் இருந்ததற்கான சான்றுகள் பல. வரலாற்று ஆய்வார்கள் பல சான்றுகள் வழங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இலக்கியங்களும் பல வழங்கியிருக்கிறது. ஆம்! அவை,
இதில் “யாதும் ஊரே , யாவரும் கேளீர்." என்ற சொற்றொடர் நிப்பான் நாட்டு நாடாளுமன்றத்தின் முகப்பில் எழுதி வைத்துள்ளார்கள். 'யாதும் ஊரே , யாவரும் கேளீர்.' என்ற எண்ணம் மற்றவர்களையும் எவ்வளவுத் தாக்கம் செய்துள்ளது என்பதை அறியும் போது நம்முடைய எண்ண்ங்களின் பரந்த மனப்பான்மை பொதுமை நோக்கும் அறிய முடிகிறது.
'விழா' என்பது விழைந்து செய்வது; விரும்பிச் செய்வது; நலன் கருதிச் செய்வது; அன்புடன் கூடுவது; பண்புடன் பழகுவது; மகிழ்ந்து கொண்டாடுவது; ஆடிப் பாடுவது; மனைவி மக்கள் சுற்றத்துடன் உண்பது; உறவினர்களுடன் உறவாடுவது; நண்பர்களுடன் நட்பாடுவது; புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் தருவது; ஊக்கம் ஊட்டுவது; ஆக்கம் அளிப்பது; வாழ்ந்த வரலாற்றை நினைவு கூர்வது; வாழ்கின்ற வாழ்வை ஆராய்வது; எதிகால வாழ்வுக்குத் திட்டம் தீட்டுவது; அம்மட்டோ! விழா, ஓர் இனமக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், வரலாறு, அரசியல், குமுகாயவியல் முதலியவற்றைப் முரசொலிப்பதாக அமைதல் வேண்டும். அந்த மக்களுக்கு உரிமை உணர்வையும், விடுதலை வேட்கையையும் உணர்த்துவதாக இருத்தல் வேண்டும்' - பாவாணரின் இலக்கணத்திற்குட்பட்டு ஏற்படுத்தப்பட்ட விழா தான் பொங்கல் விழா.
முதல் நாள், போக்கி திருநாள் என்று அழைக்கப்படுகிறது. 'போக்கி' என்பது போக்குதல் என்ற பொருளில் கொள்ளப்பட்டால், தூய்மை செய்தல் ஆகும். ஆம், பொங்கலுக்கு முந்தைய நாள், நம் புற அழுக்குகளை, பழையவற்றை அகற்றி, அதாவது பழைய துணிகள் , தேவையற்றப் பொருள்களை அகற்றி வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மைப் படுத்துவதும். மேலும், மனதிலுள்ள அழுக்குகளையும் நீக்கி இனி ஒரு புதிய சூளுரைக் கொள்ள செய்யவும் எடுக்கப்படும் விழாவாகும். 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற சொல்லடைக்கு பொருந்துவதாகயுள்ளது.
இதே போக்கி நாளை, போகி நாள் என்றும் அழைத்தல் சரியே என்கிறார் கவிஞர் கண்ணதாசன். போகி என்ற சொல் 'போகம்' என்ற சொல்லிருந்து வந்தது என்று கூறுகிறார். போகம் என்றால் விளைச்சல் எனப்படும். விளைச்சலுக்குரியவன், போகத்துக்குரியவன் என்பார்கள். போகத்துக்குரியவர்கள் நிலச்சுவான்தார்கள் . அதனால்தான் அந்த விழா நிலம் உள்ளவர்களின் வீட்டில் மட்டும் தடபுடலாக இருக்கும். போகத்துக்குரியவன் விழா , போகி விழா என்பார்.
அடுத்த நாள், தை முதல் நாள். அந்த நாள் பொங்கல் திருநாள் எனக் கொண்டாடுகிறோம். வேளாளண் ஆகிய நமக்கு மறைமுகமாக துணைபுரியும் கதிரவனுக்கு நன்றி மறவாமல் கொண்டாடும் திருநாள். அன்றைய நாள், புதுப் பானையில், புது நெல்லிட்டு , புது மஞ்சள் கட்டி, புதுக் கரும்பு வைத்து, புது அடுப்பில் திறந்த வெளியில், கதிரவனை நோக்கி பொங்கலிட்டு கதிரவனுக்கு தன் நன்றியை கூறிடும் திருவிழா. வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிக்குரிய விழாவாகும்.
இதே நாளை 500 புலவர்கள், மறைமலையடிகள் அவர்கள் தலைமையில் கூடி தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு பிறப்பு என்று முடிவு செய்தனர். அதே நேரத்தில் இத்தொடர் ஆண்டை திருவள்ளுவர் ஆண்டு என பெயரிட்டனர். இப்போதைய ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளை கூட்டினால் தற்பொழுதைய திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும் என்றும் அறுதியிட்டனர். தமிழர்களாகிய நாம் இத் திருநாளை தமிழர்களின் புத்தாண்டு பிறப்பாக கொண்டாட வேண்டும். “தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்" என்ற முதுமொழி இதை அடிப்படையாக கொண்டு உருவானதுதான்.
அடுத்த நாள், காணும் பொங்கல் திருநாள் அல்லது கன்னிப் பொங்கல் திருநாள் என்று கூறுகிறார்கள். உழவர்கள் தன் சுற்றத்தாருடனும், உற்றாருடனும் கூடிக் குலாவி, மகிழ்ச்சியுடன் பேசி பழகி மகிழ்ச்சியாக இருக்கவும், வருங்காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும், எதை நோக்கிச் செல்லவேண்டும் என்ற திட்டமிடலுக்காவும் கொண்டாடப்படும் திருநாள் காணும் பொங்கல் திருநாள். உணவைப் பகிர்ந்துக் கொள்ளும், நிலமும் இல்லாத, விவசாயமும் செய்யாத பொது மக்களின் விழா என்றும் கவிஞர் கண்ணதாசன் செப்புகிறார். மற்றொரு கரணியமும் கூறப்படுகிறது. அதாவது, கன்னியர்கள் தன் உள்ளக்கிடங்கை கூறி பொங்கலிட்டு வணங்கும் திருநாள் என்பதால் இதை கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கிறார்கள்.
கட்சி என்ற காட்சிகளைக் கலைத்து, சாதி என்ற சனியனை சாய்த்து, மதம் என்ற மாச்சரியங்களை மாற்றி அனைவரும் பொங்கல் விழா கொண்டாடுவதன் மூலம் தமிழர் என்ற ஓர்மை உணர்வை உலகுக்கு பறைச் சாற்றுவோம். நம் மீது போர்த்தப்பட்டுள்ள கட்சி, சாதி, மதம் என்ற போர்வையை நீக்கி, என்றும் தமிழர்கள் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.

தமிழறிவுப் போட்டி வினா விடைப் பொத்தகம்001


                            வெளியீடு : 002

இன்பம் இளங்கண்ணன் கல்வி நல அறக்கட்டளை
              பீர்க்கன்காரணை

பதிவு எண் : 4272/2007



தமிழறிவுப் போட்டி 

வினா விடைப் பொத்தகம்













வெளியிடுவோர்:
இன்பம் இளங்கண்ணன் கல்வி நல அறக்கட்டளை - பீர்க்கன்காரணை
“தாயகம்”
4, மறைமலையடிகள் வீதி,
சீநிவாசநகர் மற்றும் அஞ்சல்,
பீர்க்கன்காரணை,
சென்னை 600 063.

செல்லிடப் பேசி: 9444515210, 9445107358.

போட்டி நெறிமுறைகள்                                 
  
1.   தேர்வுக்குரிய பாடப் பகுதி
அ) வகுப்பு       வினா எண்கள்
      06          01 முதல் 30 வரை
      07          01 முதல் 45 வரை
      08          01 முதல் 60 வரை
      09          01 முதல் 80 வரை
      10          01 முதல் 100 வரை


ஆ) மேற்கண்டப் பாடப் பகுதியிலிருந்து,
     6ஆம் வகுப்புக்கு 20 வினாக்களும்,
     7ஆம் வகுப்புக்கு 30 வினாக்களும்,
     8ஆம் வகுப்புக்கு 40 வினாக்களும்,
     9      ஆம் வகுப்புக்கு 50 வினாக்களும்,
    10ஆம் வகுப்புக்கு 60 வினாக்களும்
        கேட்கப்படும்.


இ) தெளிவான அழகிய கையெழுத்துத் தேவை.


ஈ). ஒவ்வொரு நிலைக்கும் இரண்டு பரிசுகள் வழங்கப்படும்.                


உ) தேர்வுத் தொடர்பான அனைத்திலும் தேர்வு   நடத்தும் குழுவின் முடிவே இறுதியானது
                   லோ. பாலகிருட்டிணன்
                 செயலாளர்.
                                             இன்பம் இளங்கண்ணன்
                                             கல்வி நல அறக்கட்டளை 
                                        - பீர்க்கன்காரணை.


பெண் கல்வி
            தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
     சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
     சிலைபோல் ஏன் அங்கு நின்றாய் நீ!
     சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
     விலைபோட்டு வாங்கவா முடியும்? கல்வி
     வேளை தோறும் கற்று வருவதால் படியும்
     மலைவாழை அல்லவோ கல்வி? நீ
     வாயார உண்ணுவாய் போ என் புதல்வி
     படியாத பெண்ணாய் இருந்தால் கேலி
     பண்ணுவார் உன்னை இவ்வூரார் தெரிந்தால்
     கடிகாரம் ஓடும்முன் ஓடு என்
     கண்ணல்ல! அண்டைவீட்டுப் பெண்களோடு
     கடிதாய் இருக்கும் இப்பொது கல்வி
     கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது!
     கடல் சூழ்ந்த இத்தமிழ்நாடு பெண்
     கல்வி பெண் கல்வி என்கின்றதன் போடு!
                           --- பாரதிதாசன்.
தாய்மொழி வழிக்கல்வி பற்றி.....!
மொழி தொடர்பான மூளை ஆராய்ச்சியில் அரிய உண்மைகளைக் கண்டறிந்தவர் உலகப் புகழ்பெற்ற சப்பானிய நரம்பியல் ஆய்வாளர் சுனோடா என்பவராவார். 1965 இல்  தொடங்கி மூளைக்கும் மொழிக்குமுள்ள நெருங்கிய தொடர்பை முறையாக ஆய்ந்து, 1975 வாக்கில் மொழிக்கும் மூளைக்கும் அதிலும் குறிப்பாக, தாய்மொழிக்கும் மூளைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, பல புதிய அரிய அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தார். அவர் இந்த ஆய்வை சப்பான் மொழி பேசும் சப்பானியர்களைக் கொண்டு மட்டுமல்லாது, ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஸ்பானியம், இத்தாலியன், ஜெர்மன், ஸ்வீடிஸ் போன்ற மேற்கு ஐரோப்பிய மொழி பேசும் 57 பேரையும், சீனமொழி பேசும் 15 பேரையும்  கொரிய மொழி பேசும் 17 பேரையும் மற்றும் வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா , இஸ்ரேல், ஆப்பிரிக்கா ஆகியவற்றில் வழங்கும் மொழிகளைப் பேசுவோரையும் வைத்துத் தன் ஆய்வைச் செய்தார்.

      தன் ஆய்வுகளின் முடிவை 1981இல் ஏதென்சில் நடைபெற்ற யுனெஸ்கோ கருத்தரங்கில் ஆதாரபூர்வமாக அறிவியல் அடிப்படையில் வெளிப்படுத்தினார். “தாய் மொழிக்கும் மூளைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. தாய்மொழிக் கல்வியைத் தொடக்கக் கல்வியாகப் பெறுவோரின் சுயசிந்தனை ஊற்றுக்கண் மூளையில் முழுமையாகத் திறக்கப்படுகிறது.” என்பதே அவர்தம் அறிவியல் ஆய்வுத் திரட்சி, அதுவரை அனுமானமாக இருந்த ஆய்வை ஆதாரபூர்வமாக அறிவியல் அடிப்படையில் நிலைநாட்டியப் பெருமை சுனோடாவையே சாரும்.
                                                                    கல்வியாளர் மணவை முஸ்தபாவின் சுயசிந்தனை வளம் பெற..... என்ற கட்டுரையிலிருந்து.
                                   
நன்கொடை:உரூபா:3.00
01. ஐந்தின் வகைதெரிவது யாது?
Ø  சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.     (குறள் 27)

02. சமற்கிருதம் என்பதன் பொருள் என்ன?
Ø  செய்யப்பட்ட மொழி.

03. யார் அந்தணர்?
Ø  அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (குறள் 30)

04. பண்டைத் தமிழகத்தின் மூன்று பிரிவுகள் எவை?
Ø  சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு.

05. என்றும் மாறாத இளமைத்தன்மை கொண்டிருப்பதால் தமிழுக்கு வழங்கபடும் அடைமொழி என்ன?
Ø  கன்னித்தமிழ்

06. *தமிழ்க் குறுங்கணக்கு என்பது எந்தெந்த எழுத்துகள்?
Ø  உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும்.

07. முத்தமிழ் என்பவை எவை?
Ø  இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்

08. உயர் தனிச் செம்மொழி என்று எந்த மொழியைச் சிறப்பித்துக் கூறப்படுகிறது?
Ø  தமிழ் மொழி

09. பாவலரேறு குழந்தைகள், சிறுவர்களுக்காக இயற்றிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ள நூலின் பெயர் என்ன?
Ø  பள்ளிப் பறவைகள்.

10. தமிழ் என்னும் சொல் தரும் பொருள் எது?
Ø  இனிமை

11. தனித்தமிழ் இயக்கத் தந்தை யார்?
Ø  மறைமலையடிகள்.
12. பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுக.
Ø  பிறமொழி        தமிழ்
அ) புக்          பொத்தகம்
ஆ) நோட்டு      சுவடி
இ) பேனா        தூவல்
ஈ) தபால்        அஞ்சல் (அ) கடிதம்

13. வேறு மொழிச் சொல் கலக்காமல் பேசப்படும், எழுதப்படும் தமிழ் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
Ø  தமிழ் அல்லது தனித்தமிழ்

14. தமிழ் நெடுங்கணக்கு  என்பது எந்தெந்த எழுத்துகள்?
Ø  உயிர் எழுத்துகளும், மெய் எழுத்துகளும்,
உயிர்மெய் எழுத்துகள் ஆகியன.

15. பொருத்துக:
Ø  ஓரெழுத்து        பொருள்
அ) ஆ          பசு
ஆ) ஈ                 கொடு
இ) ஊ                இறைச்சி
ஈ)  ஐ                தந்தை.

16. உயிர் எழுத்துகள் உடலின் எப்பகுதியை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
Ø  கழுத்துப் பகுதியை.

17. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று அனைவரும் சமம் என்றவர் யார்?
Ø  திருமூலர்.

18. ‘நீராரும் கடலுடுத்த...’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் யார்?
Ø  மனோன்மணியம் சுந்தரனார்.

19. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே உள்ள எழுத்து எது?
Ø  .
20. இரட்டைக் காப்பியங்கள் என்று அழைகப்படுவன எவை?
Ø  சிலப்பதிகாரம், மணிமேகலை.

21. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றுப் பாடல் வரி எந்தப் பல்கலைக்கழக வாயில் முகப்பில் எழுதப்பட்டுள்ளது?
Ø  ஸ்பானியப் பல்கலைக் கழகம்.

22. தமிழில் கிடைத்துள்ள தொன்மையான இலக்கண நூல் எது?
Ø  தொல்காப்பியம்.

23. பொருத்துக:
Ø  நூல்                  ஆசிரியர்
அ)உலகநீதி            உலகநாதன்
ஆ)கொன்றைவேந்தன்    ஒளவையார்
இ) திருக்குறள்         திருவள்ளுவர்
ஈ) இராமாயணம்        கம்பர்

24. ஐம்பெருங் காப்பியங்கள் எவை?
Ø  சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

25. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
Ø  133.

26. தமிழே உலகின் முதன் மொழி என்று சான்றுகளுடன் நிறுவியவர் யார்?
Ø  பாவாணர்.

27. தெலுங்கு, மலையாளம், கன்னடம் , துளு முதலிய திரவிட மொழிகள் எந்த மொழியிலிருந்து தோன்றின?
Ø  தமிழ் மொழியிலிருந்து.

28. நான்கு வகைச் சொற்கள் யாவை?
Ø  பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல்,
 உரிச்சொல்.
29. “இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்” என்ற வரிகள் கொண்ட இலக்கியம் எது?
Ø  மனோன்மணியம்.

30. ஐவகை நிலங்கள் யாவை?
Ø  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.

31. படிக்கப் படிக்க அறிவு வெளிப்படும் என்று கூறும் குறள் எது?
Ø  தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
   கற்றனைத் தூறும் அறிவு.          (குறள் 396)

32. ஆயிரம் என்ற எண் வரும் குறள் எது?
Ø  அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.   (குறள் 259)

33. இந்தியா முழுவதும் முன்பு பேசப்பட்ட மொழி தமிழ் என்று நிறுவியவர் யார்?
Ø  பி. ஆர். அம்பேத்கர்.

34. அமெரிக்காவில் எந்த அருவியில் ‘நல்வரவு’ என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது?
Ø  நயகரா நீர்வீழ்ச்சி.

35. இந்தியாவில் முதன் முதலாக எந்த மொழியில் நூல் அச்சடிக்கப்பட்டது?
Ø  தமிழ் மொழியில்.

36. “பயன் கருதாது பெய்யும் மழை” என்ற கருத்திற்குக் குறளாசான்.....?
Ø  கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு.    (குறள் 211)

37. தமிழ்த்தொண்டு ஆற்றிய கால்டுவெல், ஜி.யு.போப், ஜோசப் பெஸ்கி முதலியோர் வெளிநாட்டிலிருந்து எந்த மதத்தைப் பரப்ப வந்தவர்கள்?
Ø  கிறித்தவ சமயம்.
38. திருக்குறளின் மூன்று பிரிவுகள் எது?
Ø  அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்.

39. தமிழ்மொழியில் மட்டுமே உள்ள இலக்கண வகை எது?
Ø  பொருள் இலக்கணம்.

40. உலகப் பொதுமறை என்று எந்த நூல் குறிப்பிடப்படுகிறது?
Ø  திருக்குறள்.

41. பொருத்துக:
Ø  நூல்                  ஆசிரியர்
அ)பெரியபுராணம்       சேக்கிழார்
ஆ)பழமொழி                மூன்றுறைஅரையனார்
இ) சிலப்பதிகாரம்       இளங்கோவடிகள்
ஈ) சிறுபஞ்சமூலம்       காரியாசன்

42. தமிழ் மருத்துவத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
Ø  சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம்.

43. ஆயிரத்துக்கு மேற்பட்ட எழுத்துகள் கொண்ட மொழிகளில் ஒன்றைக் கூறுக.
Ø  சீனமொழி.

44. பிழைநீக்கி எழுதுக.
Ø  பிழை            திருத்தம்
அ) சுவற்றில்           சுவரில்
ஆ) கயிறை      கயிற்றை
இ) மனதை       மனத்தை
ஈ) விற்க்கப்படும் விற்கப்படும்.

45. நடுவுநிலைமை உடையான் செல்வத்தின் முறையான பயன் பற்றிய குறள் ......?
Ø  செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.     (குறள் 112)
46. நேவி, கேஷ், ஸ்பிச் முதலிய சொற்களின் மூலச் சொற்கள் எவை?
Ø  நாவாய், காசு, பேச்சு.

47. தமிழுணர்வூட்டும் ‘தமிழியக்கம்’ நூலை இயற்றிய பாவலர் யார்?
Ø  பாவேந்தர் பாரதிதாசன்.

48. பின்வரும் பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுக.
Ø  பிறமொழி        தமிழ்
அ) எரேசர்       அழிப்பான்
ஆ) பெல்ட்       இடைவார்
இ) டிபன் பாக்ஸ் சிற்றுண்டிக் கலம்
ஈ) டியூஷன்       தனிப்பயிற்சி.

49. தனித் தமிழ் இயக்கத்தை மக்களிடையே பரப்பியவர் யார்?
Ø  பாவலரேறு பெருஞ்சித்திரனார், மற்றும் பாவாணர்

50. யார் யாருக்கு இல்வாழ்வான் துணை?
Ø  துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. .   (குறள் 42)

51. தமிழ் வழிக் கல்வித் தந்தை யார்?
Ø  மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார்.

52. வரவு செலவு குறித்து பொய்யாமொழியார்.....?
Ø  ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.     (குறள் 478)

53. பொருத்துக:
Ø  ஓரெழுத்து        பொருள்
அ) கா               சோலை
ஆ) கை         உடலுறுப்பு
இ) கோ         அரசன்
)  கூ                கூவுதல்.

54. “வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” வாடியவர் யார்?
Ø  வள்ளலார். (இராமலிங்க அடிகளார்.)

55. தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?
Ø  தொண்ணூற்றாறு.

56. எழுத்துக்கள் படமாக உள்ள மொழி ஒன்றைக் கூறுக.
Ø  சீனமொழி.

57. ஞாலுதல் தொங்குதல் என்ற கருத்து அடிப்படையில் உலகத்திற்கு நம் முன்னோர் இட்ட பெயர் யாது?
Ø  ஞாலம்.

58. பெருஞ்சித்திரனார் தொடங்கிய இதழ்கள் எவை?
Ø  தென்மொழி, தமிழ் நிலம், தமிழ்ச் சிட்டு.

59. புதன், சனிக் கிழமைகளுக்குரிய தமிழ்ச் சொற்கள் யாவை?
Ø  அறிவன் கிழமை, காரிக் கிழமை.

60. பின்வரும் பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுக.
Ø  பிறமொழி             தமிழ்
அ) சோப்பு            வழலை
ஆ) துணிசோப்பு        சவர்க்காரம்
இ) ஸ்விட்ச்            சொடுக்கி
ஈ) கிரைண்டர்          மின்னுரல்  

61. தமிழிசையைக் காக்கத் தமிழிசை மன்றத்தை நிறுவியவர் யார்?
Ø  அண்ணாமலை அரசர்.

62. சிலப்பதிகாரத்திற்கான அடைமொழி யாது?
Ø  நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்.

63. ‘வேளாண் வேதம்’ என்கிற நூல் எது?
Ø  நாலடியார்.
64. “உள்ளத்தில் தோன்றும் கருத்தை வெளிக் காட்டுவதற்குத் தமிழைவிட எந்த மொழியும் இயைந்ததாக இல்லை” என்று கூறிய வெளிநாட்டவர் யார்?
Ø  அறிஞர் பெர்சிவல்.

65.  “யாதும் ஊரே யாவரும் கேளீர், தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று கூறியவர் யார்?
Ø  கணியன் பூங்குன்றனார்.  

66. தமிழ் மொழிக்கென்று தனிப் பல்கலைக் கழகம் எங்கு உள்ளது?
Ø  தஞ்சாவூரில்.

67.  பின்வரும் பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுக.
Ø  பிறமொழி       தமிழ்
அ) ஸ்கேல்           அளவுகோல்
ஆ) பென்சில்    கரிக்கோல்
இ) சாவி        திறவு
ஈ) பல்பு         குமிழ் விளக்கு

68. “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று பாடிய கவிஞர் யார்?
Ø  நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.

69.  “ஜன்னல்” என்ற பிறமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச் சொற்களை எழுதுக.
Ø  சாளரம், பலகணி, காலதர்.

70. பொருத்துக:
Ø  ஓரெழுத்து       பொருள்
அ) சா          இறந்து போ
) சே         சிவப்பு          
இ) சோ         அரண்
ஈ) தீ           நெருப்பு.

71. வேர்ச்சொல் ஆராய்ச்சி வித்தகர் யார்?
Ø  தேவநேயப் பாவாணர்.
72.  “வேளாளண் என்போன் விருந்திருக்க வுண்ணாதான்” இவ்வரியைக் கொண்ட நூல் எது?
Ø  திரிகடுகம். (பாடல் 112.)

73. பொருத்துக:
Ø  அடைமொழி             பெயர்
கல்வியில் பெரியர்    கம்பர்
கிறித்தவக் கம்பர்    எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
தாண்டக வேந்தர்    திருநாவுக்கரசர்
தெய்வப்புலவன்      திருவள்ளுவர்.

74. ‘பொன்னோடு வந்து கறியோடு பெயர்ந்தனர்’ என்ற இலக்கிய வரியில் கறியோடு என்ற சொல், தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியான எந்தப் பொருளைக் குறிப்பிடுகிறது?
Ø  மிளகு.

75.  “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்
தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” இதை பாடியவர் யார்?
Ø  பாரதிதாசன்.

76. பிழை நீக்கி எழுதுக.
Ø  பிழை           திருத்தம்
அ)அருகாமை          அருகில்
ஆ)ஒருவள்       ஒருத்தி
இ) கல்யாணம்          கலியாணம்
ஈ) நாகரீகம்           நாகரிகம்.

77. தமிழறிஞர்கள் ஆய்வுப்படி, தமிழ்ப் புத்தாண்டு எந்த        மாதம் தொடங்குகிறது?
Ø  சுறவம் (தை) மாதம்.

78. “சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் எந்த ஐரோப்பிய மொழியையும் விடத் தமிழ் சிறந்தது” என்று கூறிய வெளிநாட்டவர் யார்?
Ø  மொழியறிஞர் விட்னே.
79. பொருத்துக:
Ø  அடைமொழி                பெயர்
பாவேந்தர்            பாரதிதாசன்
தமிழ்த்தென்றல்        திரு.வி.க.
பாவலரேறு            பெருஞ்சித்திரனார்.
       
80. வள்ளுவர்க் கோட்டம் யாரால், எங்கு, எப்பொழுது         நிறுவப்பெற்றது?
Ø  கலைஞர் மு. கருணாநிதி அவர்களால்,
சென்னையில், 1976இல்.

81. பிழை நீக்கி எழுதுக.
Ø  பிழை                திருத்தம்
அ) பசும்பால்         பசுப்பால்
) தொலைபேசி      தொலைப்பேசி
இ) வேண்டாம்        வேண்டா
ஈ) பனிரண்டு                பன்னிரண்டு.

82. சட்டம் இயற்றித் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை மீண்டும் சூட்டிய முதலமைச்சர் யார்?
Ø  கா.ந. அண்ணாத்துரை (அறிஞர் அண்ணா)

83. பொருத்துக:
Ø  ஓரெழுத்து            பொருள்
அ)தா                கொடு
ஆ)தூ                தூய்மை
இ)தை                தையல்
ஈ) நா                நாக்கு.    

84. இப்பொழுது நடைமுறையில் உள்ள எழுத்துச் சீர்த்திருத்தம் யார் உருவாக்கியது?
Ø  தந்தைப் பெரியார்.

85. திருக்குறளில் ஒரே தலைப்பில் உள்ள இரு        அதிகாரங்கள் எவை?
Ø  குறிப்பறிதல்(பொருட்பால்),
குறிப்பறிதல்(இன்பத்துப்பால்).
86.  ‘ஊதாரித்தனம், சிக்கனம், கருமித்தனம்’ என்ற சொற்களுக்கு விளக்கம் தருக.
Ø  ஊதாரித்தனம்  -     தேவைக்கு மேல் செலவு
 சிக்கனம்        -     தேவைக்குச் செலவு செய்வது
கருமித்தனம்              -     தேவைக்கும்செலவுசெய்யாதது.
    
87. பொருத்துக:
Ø  ஓரெழுத்து       பொருள்
அ) பா                பாட்டு
ஆ)போ          செல்
இ) மா                விலங்கு
ஈ) பை                பசுமை.

88. “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று சொன்னவர் யார்?
Ø  திருமூலர்.

89. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’, ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’, ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்ற மூன்று நீதிகளை கூறும் நூல் எது?
Ø  சிலப்பதிகாரம்.

90. பொருத்துக:
Ø  அடைமொழி                பெயர்
குழந்தைக் கவிஞர்      அழ. வள்ளியப்பா
நாமக்கல் கவிஞர்       வெ. இராமலிங்கனார்
கவிமணி              தேசீக விநாயகம் பிள்ளை
பாவாணர்             ஞா. தேவநேயனார்.

91. செவ்வாய்க் கோளில் உள்ள ஒரு பாறைக்கு நம்முடைய எந்த விழாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது?
Ø  பொங்கல்.

92. முதல் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம் என்று சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் காப்பியம் யாது?
Ø  சிலப்பதிகாரம்.
93. பொருத்துக:
Ø  நூல்                 ஆசிரியர்
அ)திரிகடுகம்               நல்லாதனார்
ஆ)மணிமேகலை       சீத்தலைச் சாத்தனார்
இ)இரட்சணியயாத்திâ¸õ  எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
ஈ) நான்மணிக்கடிகை     விளம்பி நாகனார்.

94. திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்த்த ஆங்கிலேயர் யார்?
Ø  ஜி.யூ. போப்.

95. இந்தியாவில் முதல் முறையாகத் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்த தமிழறிஞர் யார்?
Ø  திரு. வி. கல்யாணசுந்தரனார்.

96.  மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துக்கள் எவை?
Ø  மெல்லின மெய் எழுத்துகள்.

97.  “மேடையிலே வீசுகின்ற் மெல்லிய பூங்காற்றே” யாருடைய வரி?
Ø  வள்ளலார், (திருஅருட்பா).

98. ‘சொல்லின் செல்வர்’ என அழைக்கப்பெற்ற தமிழ்ப் பேராசிரியர் யார்?
Ø  ரா. பி. சேதுப்பிள்ளை.

99. திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட கி.பி. ஆண்டுடன் எத்தனை ஆண்டுகள் கூட்டப்படுகின்றன?
Ø  31 ஆண்டுகள்.

100.     பின் வரும் பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுக.
Ø  பிறமொழி         தமிழ்
அ)இண்டர்நெட்     இணையம்
ஆ)ஈமெயில்             மின்னஞ்சல்
இ) எஸ்.எம்.எஸ்.   குறுமடல்
ஈ) சி.டி.           குறுந்தகடு.